Pages

Tuesday, October 27, 2015

இ.பி.எஃப். ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியம் பெற உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க அறிவுறுத்தல்

ஓய்வூதியதாரர்கள் உயிர்வாழ் சான்றிதழை (life certificate) கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அதன் சென்னை மண்டல ஆணையர் எஸ்.டி.பிரசாத் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இ.பி.எஃப்) திட்டத்தின் கீழ், ஆண்டுதோறும் ஓய்வூதியம் பெறுவோர் நவம்பரில் உயிர் வாழ் சான்றிதழை தங்களது வங்கியின் கிளை மேலாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். சான்றிதழில் தங்களின் ஓய்வூதிய ஆணை எண்ணையும், செல்லிடப்பேசி எண்ணையும் அவசியம் குறிப்பிட வேண்டும்.


விதவை ஓய்வூதியதாரர்கள் மறுமணம் செய்து கொள்ளவில்லை என்ற சான்றிதழையும் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும். வங்கி சார்ந்த பணிகளுக்குப் பின்னர், உரிய காலத்துக்குள் வங்கிகள் அந்தச் சான்றிதழ்களை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். 
ஆயுள் காலச் சான்றிதழைச் சமர்ப்பிக்காதவர்களுக்கு, 2016-ஆம் ஆண்டு ஜனவரியிலிருந்து ஓய்வூதியம் வழங்குவது நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.