முதுகலை இன்ஜினியரிங் படிப்புகளில் சேருவதற்கான, கேட் 2016 தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும்,8ம் தேதி வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
முதுகலை இன்ஜினியரிங் படிப்புகளில் மத்திய அரசின் உதவித் தொகையுடன் மேற்கொள்ள, கேட் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம். இத்தேர்வில் தகுதி பெற்றவர்கள் மட்டுமே, முதுகலை இன்ஜி., பயில சில கல்லுாரிகள் அனுமதிக்கின்றன. இந்திய அறிவியல் நிறுவனம், ஐ.ஐ.டி., ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தத் தேர்வை ஆண்டுதோறும் நடத்துகின்றன.
இத்தேர்வுக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க, அக்., 1 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மாணவர்களின் நலன் கருதி, வரும், 8ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அடுத்தாண்டு ஜன., 30 முதல் பிப்., 7 வரை தேர்வு நடக்கிறது. ஆன்லைன் முறையில் நடக்கும் இத்தேர்வின் முடிவுகள், மார்ச் மாதம் வெளியிடப்படவுள்ளன.
மேலும், விவரங்களுக்கு, gate.iisc.ernet.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.