Pages

Friday, October 2, 2015

உச்சநீதிமன்ற தடையால் தமிழ்நாட்டில் 7வது ஊதிய குழு அமைப்பது கேள்வி குறியே? கிப்சன், டாடா

ஊதிய பிரச்சனையில் உச்சநீதிமன்ற தடை காரணமாக 6வது ஊதியமுரன்பாடு அரசு தீர்க்க முடியாது. கல்வி துறை சார்பாக  டாட்டா சங்க சங்கம் SLP-9109 /2015ல் I.A.NO.6/2015.வழக்கு தாக்கல் செய்யப்பட்டுஉள்ளது. உச்சநீதிமன்ற தடையால் தமிழ்நாட்டில் 7 வது ஊதிய குழு அமைப்பது கேள்வி குறியே? இதோ தடை ஆணை...

யார் கள போராட்டம் செய்தாலும் சென்னை மாநில செயற்குழுவில் எடுத்த முடிவு படி டாட்டா முழு ஆதரவு.
தமிழ்நாட்டில் 6வது ஊதிய குழு அரசு ஆணை.234 நிதி நாள்.1.6.2009ன் படி நடைமுறை படுத்தப் பட்டது. அதில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்கனவே பெற்றுவந்ததை விட ரூ.370 குறைவாக நிர்ணயம் செய்யப் பட்டது. தற்காலிக தீர்வாக அரசு ஆணை.258 நிதி நாள்.27.6.2009ன் படி 1.1.2006 முதல் 31.5.2009 முடிய பணி நியமனம் பெற்றவர்கள் 1.86 என்ற விதியை பயன்படுத்தி ஊதியத்தை பெருக்கி நிர்ணயம் செய்து கொள்ள ஆணையிடப்பட்டது. அதன் பின் அரசு ஆணை.444ன் படி ஊதிய பிரச்சனையை தீர்க்க ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு அரசின் கைபாவையாக செயல்பட்டு முரண்பாடான அறிக்கையை அரசிடம் சமர்பித்தது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் நிதிமன்றத்தை நாடினர். நீதிமன்ற தீர்ப்பு படி அரசு ஆணை.123ன் படி 3 நபர்களை கொண்ட ஊதிய குறைதீர்க்கும் பிரிவு அமைக்கப்பட்டது. இந்த குழுவும் 4342 பேரிடம் 4 நாளில் விசாரணை செய்து முரண்பாடான பொய்யான அறிக்கை அரசிடம் கொடுக்கப்பட்டது. டாட்டா சங்கம் தகவல் பெறும் உரிமை சட்டம் மூலம் பல்வேறு ஆதரங்களை சேகரித்து வழக்கு தாக்கல் செய்தது. மேலும் இணையம் மூலம் சேகரித்த தகவலை வெளியிட்டு அனைவரையும் விழிப்படைய செய்த சங்கம் டாட்டா.
27.2.2014ல் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு படி 6வது ஊதிய குழு அறிக்கையை ரத்து செய்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் 6வது ஊதிய குழு முரண்பாடுகளை தீர்க்க ஆணையிடப்பட்டது. தமிழக அரசின் 6 வது ஊதிய குழு தவறானது என உயர் நீதிமன்றத்தில் 3642 பேர் வழக்கு நடத்தி உள்ளார்கள். மேலும் 72,000 இடைநிலை ஆசிரியர்கள் பிரச்சனைக்காக உயர்நீதிமன்றத்தில் வழக்கு டாட்டா வும் ,எஸ் எஸ்.டி எ மட்டுமே நடத்தியது. தற்போது இந்திய உச்சநீதிமன்றத்திற்கு டாட்டா சென்று உள்ளது. 5.5 இலட்சம் ஆசிரியர்கள் பணிபுரிந்தாலும் 6வது ஊதிய குழுவுக்கு எதிராக சமரசம் இல்லாமல் வழக்கு நடத்துவது டாட்டா சங்கம்.
அன்பர்களே ஜேம்ஸ் என்ற ஒரே ஒரு உதவி தொடக்க கல்வி அலுவலர் மட்டுமே 2011ல் இருந்து சட்ட போராட்டம் நீதிமன்றத்தில் நடத்தி இன்று தர ஊதியத்தில் 200 ரூபாய் உயர்வு பெற்று உள்ளார்கள். ஒட்டு மொத்த உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு ஊதிய மாற்றம் செய்யப்படவில்லை. எனவே சாட்சி டாட்டா சட்ட போராட்டம் கண்டிப்பாக வெற்றி பெரும். அன்று இடைநிலை ஆசிரியர்களுக்கு 1.1.2006 முதல் 9300+4200 என ஊதிய மாற்றம் ஏற்படும் .
மேலும் TET வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தமிழ் நாட்டில் தகுதி தேர்வு நடத்த முடியவில்லை ,பணி நியமனம் செய்ய முடியவில்லை .அது போல் 2009 ல் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்குவழக்கு முடியும் வரை பணிமாறுதல் முடியவில்லை .அது போல் 6 வது ஊதிய பிரச்சனைக்கு உச்ச நீதிமன்றத்தில் இறுதி முடிவு ஏற்படாத வரையில் தமிழ்நாட்டில் 7 ஊதிய குழு அமைக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த நிலை ஏற்பட காரணம் தமிழக அரசு தான் காரணம் ஆகும்.
மகிழ்ச்சியான செய்தி என்ன வென்றால் 6 ஊதிய குழு பிரச்சனைக்கு இறுதி முடிவு வந்த பின்புதான் 7 ஊதிய குழு தமிழ் நாட்டில் அமைக்க முடியும். இதற்கு காரணம் டாட்டாவின் சட்ட போராட்டம் தான். எனவே கண்டிப்பாக நமக்கு சட்ட போராட்டத்தால் மாற்றம் ஏற்படும் என்பதை அனைவருக்கும் தெரிவித்து கொள்கிறேன் .
டாட்டா கிப்சன் 
9025054081 / 9443464081

1 comment:

  1. எதற்கோ கொடுத்த தடையை இதற்கு கொடுத்த தடையாகக் காட்டியுள்ளீரே...என்ன நியாயம்?

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.