Pages

Thursday, October 22, 2015

சித்தா உள்ளிட்ட 5 படிப்புகளுக்கு 25-ம் தேதி கலந்தாய்வு தொடக்கம்: 4 நாட்கள் நடக்கிறது

சித்தா, ஆயுர்வேதா, யுனானி உள் ளிட்ட 5 பட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 25-ம் தேதி தொடங்கி 4 நாட்கள் நடக்கிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 2015-16ம் கல்வி ஆண்டுக்கு சித்தா, ஆயுர் வேதம், யுனானி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், ஓமியோபதி (பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஎன்ஒய்எஸ், பிஎச்எம்எஸ்) பட்டப் படிப்புகளில் சேர தமிழகம் முழுவதும் இருந்து 5,075 பேர் விண்ணப்பித்தனர்.
விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியான 4,913 பேருக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இது, www.tnhealth.org என்ற சுகா தாரத்துறை இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேற்கண்ட 5 பட்டப் படிப்புகளுக்கான கலந் தாய்வு சென்னை அரும்பாக்கம் அண்ணா அரசு இந்திய மருத்துவ மனை வளாகத்தில் உள்ள சித்த மருத்துவக் கல்லூரி வளாகத்தில் வரும் 25-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடத்தப்படும் என்று இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, ‘‘முதல் கட்ட கலந் தாய்வுக்குப் பிறகு காலி இடங்கள் இருந்தால் 31-ம் தேதி இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தப்படும். கலந்தாய்வில் பங்கேற்குமாறு மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு கடிதங்கள் அனுப்பப் பட்டு வருகின்றன. 2 அரசு சித்த மருத்துவக் கல்லூரிகளுக்கு இன் னும் அனுமதி கிடைக்கவில்லை. விரைவில் அனுமதி கிடைத்து விடும். கலந்தாய்வு குறித்த மேலும் தகவல்களுக்கு www.tnhealth.org என்ற இணையதளத்தைப் பார்த்து தெரிந்துக் கொள்ளலாம்’’ என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.