Pages

Thursday, October 15, 2015

4 திட்டங்களுக்கு ஆதார்அட்டையை பயன்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி

முதியோர் ஓய்வூதியம், 100 நாள் வேலைவாய்ப்பு உள்ளிட்ட 4 சமூக திட்டங்களுக்கு ஆதார் அட்டையை விருப்பத்தின் பேரில் பயன்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஆதார் அட்டையை கட்டாயமாக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு மற்றும் ஆதார் கட்டாயமில்லை என்ற நீதிமன்றத் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி மத்திய அரசு தொடர்ந்த வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆதார் அட்டையை கட்டாயப்படுத்துவதால் தனி நபர்களின் அடிப்படை உரிமை எந்தவிதத்திலும் பாதிக்காது என மத்திய அரசின் வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதற்கு எதிர் மனுதாரர் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. எனினம் தற்போதைய சூழலில் முதியோர் ஓய்வூதியம், 100 நாள் வேலை திட்டம், ஜன்தன் மற்றம் பி.எஃப் திட்டங்களுக்கு ஆதார் அட்டையை பொமுக்கள் விருப்பத்தின் பேரில் பயன்படுத்தி கொள்ளலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர். எனினும் இது கட்டாயமில்லை என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். இது இடைக்கால உத்தரவு தான் என கூறிய நீதிபதிகள் வழக்கு விசாரணை தொடரும் என்றும் கூறினர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.