Pages

Saturday, October 24, 2015

தரம் உயர்த்தப்பட்ட 344 பள்ளிகளில் கட்டடங்கள் கட்டும் பணி தொடக்கம்

தமிழகம் முழுவதும் உயர்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்பட்ட 344 பள்ளிகளில் ரூ.555 கோடியில் கட்டடம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் சார்பில், 2010-11, 2011-12 ஆகிய ஆண்டுகளில் முறையே 344, 710 நடுநிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டன. இந்தப் பள்ளிகளுக்குக் கட்டடம் கட்ட தனது 75 சதவீதப் பங்கான ரூ.518 கோடியை மத்திய அரசு ஒதுக்கியிருந்தது.


இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு பள்ளிக்குக் கட்டடம் கட்ட அனுமதிக்கப்பட்ட தொகை போதுமானதாக இல்லாததால், அந்தப் பணிகள் தொடங்கப்படாமல் இருந்தன. மத்திய அரசு ஒரு சதுர அடிக்கு ரூ.600 ஒதுக்குகிறது. ஆனால், கட்டடம் கட்டுவதற்கு ஒரு சதுர அடிக்கு ரூ.1,300 வரை செலவாகிறது. இந்தப் பள்ளிகளுக்கான கட்டடங்களைக் கட்டுவதற்காக கூடுதல் நிதியையும் சேர்த்து மாநில அரசு ரூ.1,263 கோடி ஒதுக்கீடு செய்யும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.


அதன்படி, முதல் கட்டமாக 344 பள்ளிகளைக் கட்டுவதற்காக இப்போது தமிழக அரசின் பங்காக ரூ.380 கோடி, மத்திய அரசின் பங்காக ரூ.175 கோடி என ரூ.555 கோடி ஒதுக்கீடு செய்து ஆணை வெளியிடப்பட்டது. இந்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கட்டடங்கள் விரைவில் கட்டி முடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.