Pages

Saturday, October 17, 2015

செல்போன் சேவையில குறைபாடு அபராதத்தை 2 லட்சமாக உயர்த்தியது டிராய்

செல்போன் நிறுவனங்களின் சேவையில் குறைபாடு இருந்தால், அவற்றுக்கு விதிக்கப்படும் அபராதத்தை ரூ. 2 லட்சமாக இந்திய தொலைத் தொடர்பு வழிகாட்டு ஆணையமான ‘டிராய்’ உயர்த்தியுள்ளது.


இதுவரை செல்போன் சேவை குறைபாடுகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது, இந்த அபராதம் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டால், அதுவும் சேவை குறைபாடாக கருதப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என ‘டிராய்’ ( Telecom Regulatory Authority of India – TRAI) தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் செல்போன் இணைப்பு பாதியில் துண்டிக்கப்படும் போது அதற்கு இழப்பீடாக, அழைப்பு ஒன்றுக்கு ஒரு ரூபாயை வாடிக்கையாளருக்கு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்கும் வகையிலான விதியையும் ‘டிராய்’ ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.