Pages

Tuesday, October 20, 2015

தலைமை ஆசிரியர்கள்நவ., 28ல் போராட்டம்

பதவி உயர்வு முரண்பாடுகளை நீக்க வலியுறுத்தி, நவ., 28ம் தேதி, உண்ணாவிரத போராட்டம் நடத்த, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் முடிவு செய்துள்ளது. இந்தக் கழகத்தின் மாநில பொதுக்குழு, காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரத்தில் கூடியது. அதில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வில், பல முரண்பாடுகள் உள்ளன. இவற்றை நீக்க அமைக்கப்பட்ட, சீராய்வுக்குழு அறிக்கையை அமல்படுத்தவில்லை. எனவே, அறிக்கையை அமல்படுத்த வலியுறுத்தி, முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில், நவ., 28ம் தேதி, சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.

தலைமை ஆசிரியர்களின் பணிச்சுமை, 10 மடங்கு அதிகரித்துள்ளது. அரசின், 14 வகை இலவச திட்டங்கள்; வருவாய் துறை பணிகளாலும், ஆசிரியர்களின் பணி பாதிக்கப்படுகிறது. இதை தவிர்க்க, தனி அலுவலரை நியமிக்க வேண்டும்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.