குரூப் 2 தொகுதியில் அடங்கியுள்ள 2ஏ காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் கட்டக் கலந்தாய்வு வரும் 5-ஆம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
குரூப் 2 தொகுதியில் அடங்கிய நேர்முகத் தேர்வு இல்லாத காலியிடங்களை நிரப்பும் வகையில், எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு ஜூனில் நடந்தது. இதைத் தொடர்ந்து, 786 காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில், இரண்டாம் கட்ட கலந்தாய்வு சென்னையில் உள்ள அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் வரும் 5-ஆம் தேதி தொடங்கி 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் தரவரிசை அடங்கிய தாற்காலிகப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டவர்களுக்கு தேதி, நேரம் குறிப்பிடப்பட்டு விண்ணப்பதாரர்களுக்கு செல்லிடப்பேசி குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மூலமும் கலந்தாய்விற்கான அழைப்புக் கடிதம் விரைவஞ்சல் மூலமும் தனியாக அனுப்பப்பட்டுள்ளது.
எனவே, நடைபெற உள்ள கலந்தாய்வில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண், தரவரிசை, அவர்களின் இடஒதுக்கீட்டுப் பிரிவு, காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப அனுமதிக்கப்படுவர். எனவே, அழைக்கப்படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி கூற இயலாது என டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.