அண்ணா பல்கலையின் இறுதியாண்டு இன்ஜி., மாணவர்கள், 1,200 பேருக்கு, கேம்பஸ் இன்டர்வியூ என்ற வளாக நேர்காணல் மூலம், ஐ.டி., நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
முதற்கட்ட நேர்காணல், கடந்த மாதம் நடந்தது. இதில், 400 பேருக்கு, ஆண்டுக்கு, 4.5 லட்சம் ரூபாய் முதல், 25 லட்சம் ரூபாய் வரையிலான சம்பளத்துடன் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. இரண்டாம் கட்ட நேர்காணல், 1ம் தேதி முதல், 12ம் தேதி வரை நடந்தது. அசெஞ்சர், காக்னிசன்ட், ஐ.பி.எம்., இன்போசிஸ், டி.சி.எஸ்., ஆகிய நிறுவனங்கள் பங்கேற்றன. மொத்தம், 2,122 காலியிடங்களுக்கு நடந்த நேர்காணலுக்கு, 1,500 பேர் அழைக்கப்பட்டு இருந்தனர். 1,200 பேருக்கு, ஆண்டுக்கு, 3.5 லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது.
இதுகுறித்து, பல்கலை துணைவேந்தர் ராஜாராம் கூறுகையில், பெரிய நிறுவனங்கள் மூலம் தமிழகம் முழுவதுமுள்ள அண்ணா பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளில், டிசம்பரில், கேம்பஸ் இன்டர்வியூ நடத்த திட்டமிட்டு இருக்கிறோம், என்றார்.
பல்கலை மற்றும் தொழில் நிறுவன இணைப்பு மைய இயக்குனர் பேராசிரியர் தியாகராஜன் கூறுகையில், மூன்றாம் கட்ட நேர்காணல், விரைவில் நடத்தப்படும். இதில், 500 பேருக்கு வேலை கிடைக்கும்,என்றார். வேலைக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, பல்கலை மூலம் நியமன கடிதம் வழங்கப்படும். படிப்பு முடிந்ததும், மாணவர்கள் நேர்முகத் தேர்வுக்கு காத்திருக்காமல், நேரடியாக வேலையில் சேரலாம்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.