உலகமே போற்றிப்புகழும் நமது கலாச்சார பெருமைகளை, இளம்தலைமுறைகளின் மனதில் பதிய வைக்கும் வகையில், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு ராமாயணம், மகாபாரதம், பகவத்கீதையை ஒரு பாடமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய கலாச்சாரத்துறை இணை அமைச்சர் மகேஷ் சர்மா புதுடில்லியில் கூறியதாவது:
கலாச்சார சீரழிவுகளால் நம்நாடு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. நமது கலாச்சார பெருமைகளை இளம் தலைமுறைகள் உணர வேண்டும் என்பதற்காக, நம் பழம்பெரும் இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதம் மற்றும், புனிதநுாலான பகவத்கீதையை, பள்ளி கல்லுாரி பாடத்திட்டங்களில் சேர்ப்பது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.
நமது கலாச்சாரத்தின் ஒரு அம்சமாகவே இத்திட்டம் வரவிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ்., சித்தாந்தத்தை அரசு திணிக்க உள்ளது போன்ற விமர்சனங்கள் வந்தாலும், இத்திட்டத்திலிருந்து பின்வாங்கப்போவதில்லை.
உலகமே போற்றிப்புகழும் நமது கலாச்சார பெருமைகளை, இளம்தலைமுறைக்கு கற்பிப்பதில் ஆர்.எஸ்.எஸ்., சித்தாந்தம் எங்கிருந்து வந்தது? என்று இணைஅமைச்சர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.