வேளச்சேரியில் இன்று ஒரு கடையில் ஒரு மாணவி பிரிட்டானியா மில்க் பிஸ்கட் வாங்கியுள்ளார். அதில் அதில் இரு பிஸ்கட்டுகளுக்கு நடுவில் ஒரு பல்லி செத்துக் கிடந்தது.
இதை கண்டு அதிர்ச்சியுற்ற அவர் பெற்றோரிடம் கூற அந்த மாணவியின் பெற்றோர் பிரிட்டானியா நிறுவனத்தின் சென்னைப் பிரிவைத் தொடர்பு கொண்டபோது, இதுகுறித்து
கருத்துக் கூற அவர்கள் மறுத்துவிட்டனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் கூற அந்த மாணவியின் பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.
இந்தியாவின் முன்னணி பிஸ்கட் மற்றும் கேக் உற்பத்தி நிறுவனமான பிரிட்டானியா நிறுவனத்தின் அனைத்துத் தயாரிப்புகளுமே குழந்தைகளைக் குறிவைத்து தயாரிக்கப்படுபவையே.
ஆனால் இந்த நிறுவனம் தனது பிரதான பிஸ்கட் உற்பத்தியில் இத்தனை கவனக் குறைவாக இருந்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியுற வைத்துள்ளது.
No comments:
Post a Comment