Pages

Friday, September 18, 2015

டி.என்.பி.எஸ்.சி., வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு

டி.என்.பி.எஸ்.சி., தேர்வின் கீழ் நியமிக்கப்பட்ட, 73 அதிகாரிகளின் நியமனம் குறித்த வழக்கின் தீர்ப்பை, மறுதேதி குறிப்பிடாமல் சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.


கடந்த, 2000-2001ல், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., மூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள், தேர்வில் முறைகேடு செய்ததாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த தேர்வில் வெற்றி பெற்று, பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வரும், 73 அதிகாரிகளின் நியமனத்தை, ஐகோர்ட் ரத்து செய்தது; இந்த தீர்ப்பை, சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தது. பாதிக்கப்பட்ட அதிகாரிகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. 

இந்த வழக்கின் இறுதி விவாதங்கள் முடிவடைந்த நிலையில், தீர்ப்பு மறுதேதி குறிப்பிடப்படாமல் நேற்று ஒத்தி வைக்கப்பட்டது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.