தலித் மற்றும் பழங்குடியின மாணவர்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லுாரிகளில் பி.எட்., படிக்க, தமிழக அரசு, ஐந்து ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது.
தமிழகத்தில், 705 கல்வியியல் கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், ஏழு அரசு கல்லுாரிகள் மற்றும், 14 அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், பி.எட்., - எம்.எட்., படிப்புகள் உள்ளன. மொத்தம் உள்ள, 1,777 இடங்களுக்கு, 7,400 பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர். வரும், 28ம் தேதி, மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் துவங்கி, அக்., 5ம் தேதி முடிகிறது.
பி.எட்., கல்லுாரிகளில், முதலாம் ஆண்டுக்கான கல்வி கட்டணத்தை, தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. இதன்படி, முதலாம் ஆண்டு மாணவர்கள், கல்விக் கட்டணமாக, 2,070 ரூபாய் செலுத்த வேண்டும். தலித், பழங்குடியினர் மற்றும் அருந்ததி இன மாணவர்களுக்கு, கட்டணத்தில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் ஆண்டுக்கு, ஐந்து ரூபாய் மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும்.
மற்ற கட்டணங்களை, தமிழக உயர்கல்வித் துறையின் உதவித்தொகை மூலம், கல்வி நிறுவனங்களே சரிசெய்து கொள்ளும். தனியார் சுயநிதி கல்லுாரிகளில், இந்தப் படிப்புக்கு, ஆண்டுக்கு, 50 ஆயிரம் ரூபாய் முதல், 80 ஆயிரம் ரூபாய் வரை, கட்டணம் வசூலிக்கின்றனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.