Pages

Saturday, September 19, 2015

இ-சேவை மையங்கள் மூலம் ஆதார் அட்டையில் திருத்தம் செய்யலாம்

தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தின் இணைய சேவை மையங்கள் மூலமாக, ஆதார் அட்டையில் மின்னஞ்சல்- செல்லிடப்பேசி எண்களை மாற்றலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தின் சார்பில், தலைமைச் செயலகம், 264 வட்டாட்சியர் அலுவலகம் என மொத்தம் 337 இடங்களில் அரசு இணைய சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.


இந்த மையங்கள் மூலமாக, தமிழக அரசின் வருவாய்த் துறை, சமூகநலத் துறை சார்ந்த 13 லட்சத்து 28 ஆயிரத்து 647 மனுக்கள் பொது மக்களிடம் இருந்து பெறப்பட்டு சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தச் சேவை மையங்கள் வழியாக 4 லட்சத்து 36 ஆயிரத்து 352 பேருக்கு பிளாஸ்டிக் ஆதார் அட்டை அளிக்கப்பட்டுள்ளது.இந்த 337 மையங்களில் ஆதார் அட்டையைப் பதிவு செய்யும் போது வழங்கப்பட்ட செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை மாற்றும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சேவையைப் பெற விரும்புவோர், ரூ.10 செலுத்தி மாற்றம் செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.