Pages

Monday, September 28, 2015

அரசு பள்ளிகளில் மாணவர் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு

கடந்த, 4 ஆண்டுகளில், அரசு பள்ளிகளில், 72 ஆயிரத்து, 843 ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டதால், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது, என, அமைச்சர் வீரமணி கூறினார்.


வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை, பொன்னேரி, வக்கனம்பட்டி, புதுப்பேட்டை, ஜெயபுரம், வெலக்கல்நத்தம் பள்ளிகளைச் சேர்ந்த, 1,141 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா லேப்டாப் வழங்கும் விழா, ஜோலார்பேட்டையில் நேற்று நடந்தது. திருப்பத்தூர் எம்.எல்.ஏ., ரமேஷ் தலைமை வகித்தார். அமைச்சர் வீரமணி, மாணவர்களுக்கு லேப்டாப்களை வழங்கி பேசியதாவது: கடந்த, 4 ஆண்டுகளில் கல்விக்காக, முதல்வர் ஜெயலலிதா, 85 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளார். 72 ஆயிரத்தி 843 ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதனால், அரசு பள்ளிகளில் மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் உயர்ந்துள்ளது. 

கடந்தாண்டு பிளஸ் 2 தேர்வில், 113 பள்ளிகளிலும், இந்தாண்டு, 165 பள்ளிகளிலும், 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். எஸ்.எல்.எல்.ஸி., தேர்வில் கடந்தாண்டு, 883 பள்ளிகளிலும், இந்தாண்டு, 1,163 பள்ளிகளிலும், 100 சதவீதம், மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இவ்வாறு, அவர் பேசினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.