Pages

Saturday, September 19, 2015

கருணை அடிப்படையிலான பணி நியமனங்கள் விண்ணப்பிக்க கால அளவில் மாற்றம் வருமா?

அரசு ஊழியர்கள் பணிக்காலத் தில் இறந்தால், அவரது வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் பணி வழங்கி வருகிறது. சம்பந்தப்பட்டவர் இறந்தால் மூன்று ஆண்டுகளுக்குள் வாரிசுகள் வேலைகேட்டு விண்ணப்பிக்க வேண்டும் என 2005ல் தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி விண்ணப்பித்தால் உரிய கல்வி , 18 வயது நிரம்பவில்லை என பல நேரங்களில் விண்ணப்பம் திருப்பி அனுப்பப்படும். பின் அனைத்து தகுதிகளும் பெற்றவுடன் மீண்டும் விண்ணப்பித்து வாரிசுகள் அரசு பணி பெற்று வந்தனர்.


இந்நிலையில் உரிய கல்வி, வயது தகுதியுடன் மூன்று ஆண்டுகளுக்குள் வாரிசு வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என 2010ல் தமிழக அரசு உத்தரவிட்டது. மத்திய அரசு, நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் இதை பிறப்பிப்பதாக அறிவித்தது. இதனால் அரசு ஊழியரின் வாரிசு 18 வயதுக்குள் கீழ் இருந்தால் விண்ணப்பிக்க முடியாது.

இதற்கிடையே மூன்று ஆண்டுகளுக்குள் வாரிசு வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டுமென்ற நிபந்தனையை 2012 ஜூலை முதல் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மத்திய அரசு ரத்து செய்தது. இது போல் தமிழக அரசும் இந்த நிபந்தனையை தளர்த்த வேண்டும். இதன் மூலம் பலர் பயன்பெறுவர் என, அரசு ஊழியர்கள் வலியுறுத்துகின்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.