முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாளான, அக்., 15ம் தேதி, இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாட, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அனைத்து பள்ளிகளுக்கும், பள்ளிக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், 'அப்துல் கலாமின் சாதனைகளை எடுத்துக் காட்டும் வகையில், எதிர்காலத்துக்கு தேவையான ஆராய்ச்சிகள் மற்றும் அறிவியல் வளர்ச்சிகள் குறித்து, பள்ளிகளில் பல்வேறு போட்டிகளை நடத்த வேண்டும். காலாண்டுத் தேர்வு முடிந்து பள்ளிகள் திறந்ததும், இதுதொடர்பாக திட்டமிட்டு, முன்னேற்பாடுகளை, ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.