தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் சி.ஆர்.ஐ. பம்ப் நிறுவனமும் இணைந்து மாவட்ட அளவிலான அறிவியல் வினாடி வினா போட்டியை சென்ற சனிக்கிழமை 12-09-2015-இல் கோவை சித்தாபுதூர் மாநராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடத்தியது. கோவை மாவட்டத்தில் உள்ள 100க்கும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
இதில் 6,7 & 8 வகுப்புகளுக்கான பிரிவில் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் ம.அருண்குமார் (8ஆம் வகுப்பு ), ர.கோகுல்(7ஆம் வகுப்பு), வே.சீனிவாசன்(6ஆம் வகுப்பு) ஆகியோர் பங்கேற்ற குழு முதலிடம் பெற்றது.இம்மாணவர்கள் அடுத்த கட்டமாக மண்டல அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளார்கள்.
முதலிடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை பள்ளியின் தலைமையாசிரியை பத்திரம்மாள் மற்றும் சக ஆசிரியர்கள் பாராட்டினர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.