Pages

Thursday, September 3, 2015

நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் தேர்வுக்கு ஹால் டிக்கெட் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

நெடுஞ்சாலைத்துறையில் உதவிப்பொறியாளர்கள் காலிப்பணியிடங்கள் 213 உள்ளன. இந்த இடங்களுக்கு சரியான பட்டதாரிகளை தேர்ந்து எடுப்பதற்கான எழுத்துத்தேர்வு 6–ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு 27 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். 


சரியான முறையில் விவரங்களைப் பதிவு செய்து உரிய கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்களின் தேர்வுக் கூட நுழைவுச்சீட்டு தேர்வாணையத்தின் இணைய தளமான www,tnpsc.gov. in ல் வெளியிடப்பட்டுள்ளது.


மேற்படி பதவிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவு எண்ணை உள்ளீடு செய்து நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நுழைவுச் சீட்டு கிடைக்கப் பெறாத விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதா என்பதை நிராகரிப்புப் பட்டியலில் கண்டறியுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்வதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் 18004251002 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம்.

இந்த தகவலை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.