ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து, தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் வெளியிட்ட அறிக்கை:சத்துணவு மற்றும் அங்கான்வாடி பணியாளர்கள் ஓய்வூதியர் சங்க பொதுச்செயலர் மாயமலை, 'சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு, குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்' எனக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
அதில் 'சத்துணவு, அங்கன்வாடி பணி நியமனம், தமிழக அரசின், சிவில் சர்வீஸ் நியமனம்; அதற்கு அரசியல் சாசனப்படியான பாதுகாப்பு உண்டு' என, 2007ல் சென்னை உயர் நீதிமன்றமும், 2001ல் சுப்ரீம் கோர்ட்டும் தீர்ப்பு அளித்ததை சுட்டிக்காட்டி, தமிழ்நாடு ஓய்வூதிய சட்ட விதிகள்படி, குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க உத்தரவு கோரப்பட்டிருந்தது.இந்த ரிட் மனுவை பரிசீலித்த, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயணன், 'சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் ஓய்வூதியம் குறித்து, தமிழக அரசு, 12 வாரங்களுக்குள் பரிசீலித்து, உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.