Pages

Sunday, September 13, 2015

இன்ஜி., கல்லூரியில் எது 'டாப்?' வெளியானது 'ரேங்க்' முறை

பொறியியல் கல்லுாரிகளின் செயல்பாடு அடிப்படையில், அவற்றை தரம் பிரித்து, மோசமாகச் செயல்படும் கல்லுாரிகளை தர வரிசைப்படுத்துவதற்கான வரைவு பட்டியலை, தேசிய அங்கீகார வாரியமான, என்.பி.ஏ., வெளியிட்டுள்ளது.பொறியியல் கல்லுாரிகளில், ஆராய்ச்சி படிப்பு முடித்தவர்கள் மட்டுமே பேராசிரியர்களாக நியமிக்கப்பட வேண்டும்; ஆனால், முதுநிலை பட்டம் முடித்தவர்கள், பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால், கல்வித் தரம், தேர்ச்சி விகிதம் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.


அத்துடன் தற்போது பொறியியல் கல்லுாரிகளில் சில பாடங்களுக்கு மட்டுமே, என்.பி.ஏ., தரப்பில், அங்கீகாரம் வழங்கப்படுகிறது. இந்த அங்கீகாரம் பெற்ற கல்லுாரிகளுக்கான, மற்ற பாடப்பிரிவுகளுக்கு அனுமதி வழங்குவதில், அகில இந்திய கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., முன்னுரிமை அளிக்கிறது.

இந்நிலையில், இன்ஜினியரிங் மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரிகளில், மாணவர்களின் கல்வித் தரம் மற்றும் தேர்ச்சி விகிதம் பாதிக்கப்படாமல் தடுக்க, அவற்றுக்கு தர நிர்ணயம் செய்வதில், புதிய தரவரிசை முறையை அறிமுகப்படுத்த, என்.பி.ஏ., திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தில், அனைத்து கல்லுாரிகளும் தரவரிசைப்படுத்தப்படும்.

இதன்படி, கல்லுாரிகள் தங்களின் செயல்பாடு குறித்து அதற்குரிய படிவத்தில் தகவல் அளிக்க வேண்டும். அவற்றை, என்.பி.ஏ., பரிசீலித்து, நேரில் ஆய்வு நடத்தி, உண்மை நிலவரத்திற்கு ஏற்ப தர வரிசை எண் வழங்கும்.இதற்கான தர வரிசை வரைவு திட்டத்தில், கல்லுாரிகளுக்கு எப்படி தரம் நிர்ணயிப்பது என்ற விவரத்தை, என்.பி.ஏ., நேற்று வெளியிட்டது. மேலும், கல்லுாரியின், 10 வகையான செயல்பாடுகள் தனியாகப் பிரிக்கப்பட்டு, அதற்கும் தனி தர எண் வழங்க அறிவுறுத்திஉள்ளது. இந்த வரைவு திட்டம் குறித்து, 15 நாளில் கருத்து தெரிவிக்கும்படி, கல்லுாரிகளை என்.பி.ஏ., கேட்டுஉள்ளது. கூடுதல் விவரங்களை, www.nbaind.org/ இணையதளத்தில் அறியலாம்

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.