Pages

Monday, September 14, 2015

தேர்வு நேரத்தில் தொடர் பயிற்சி ஆசிரியர் கூட்டணி கண்டனம்

தேர்வு நேரத்தில், ஆசிரியர்களுக்கு தொடர் பயிற்சி அளிப்பது, மாணவர்களின் கல்வி நலனை பாதிப்பதாக, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கண்டனம் தெரிவித்துள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு, 19ல் முதல் பருவ தேர்வு துவங்குகிறது; தேர்வு சார்ந்த பயிற்சிகளை மாணவ, மாணவியருக்கு தர வேண்டிய சூழலில், ஆசிரியர்கள் பயிற்சிக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
எஸ்.எஸ்.ஏ., சார்பில், கணித உபகரண பயிற்சி, 9, 10, 11ம் தேதிகளில் நடத்தப்பட்டது; இரண்டாம் கட்டமாக, 14, 15, 16ம் தேதிகளில் நடத்தப்படுகிறது. அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, 15, 16, 18ம் தேதிகளிலும், ஆங்கில பட்டதாரி ஆசிரியர்களுக்கு, 15ம் தேதியும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

பள்ளிகளில் இருந்து ஏராளமான ஆசிரியர்கள் பயிற்சிக்கு சென்று விடுகின்றனர்; சொற்ப எண்ணிக்கையிலான ஆசிரியர்களே பள்ளியில் உள்ளனர். இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கிறது. எஸ்.எஸ்.ஏ., சார்பில் ஆண்டுக்கு, 20 நாட்கள் தர வேண்டிய பயிற்சியை, ஒரே சமயத்தில் பருவ தேர்வு நேரத்தில் அவசரமாக அளிப்பது, கேள்விக்குறியாக உள்ளது; இதனால், பள்ளி களில் ஆசிரியர் பணியை பாதிக்கிறது. 

முதல் பருவ தேர்வு நேரத்தில், ஆசிரியர்களுக்கு தொடர் பயிற்சி அளிப்பது, மாணவர்களின் கல்வி நலனை பாதிப்பதாக, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.