சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கற்றலில் குறைபாடுடைய மாணவர்களுக்கான "கேர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பிகேவியரல் சயின்ஸ்' கல்வி மையத்தில் 2015-2016 கல்வியாண்டில் ஓர் ஆண்டு முதுநிலை பட்டயப்படிப்புக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் அங்கீகரித்துள்ள இந்த மையத்தில் கற்பிக்கப்படும் இந்த முதுநிலை பட்டயப் படிப்பில் சேர, ஏதாவது ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
படிப்பில் சேரும்போது மாணவருக்கு 20 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். இந்தப் படிப்பை முடித்தவர்கள் அறிவுத் திறன் குறைபாடுடைய மாணவர்களுக்கான கல்வி நிறுவனங்களில் சிறப்பு ஆசிரியர்களாகப் பணியாற்றலாம்; மருத்துவமனைகளில் பணியாற்றும் வாய்ப்பையும் பெறலாம்.
இந்தப் பட்டய படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், "கேர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பிஹேவியரல் சயின்ஸஸ்', எண் 1, முதல் தளம், டாக்டர் திருமூர்த்தி நகர் 5-ஆவது தெரு, நுங்கம்பாக்கம், சென்னை- 600034' (தொ.பே. 044- 2821 2828) என்ற முகவரி,careibschennai@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரி ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.