மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ சார்பில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் 20-ஆம் தேதி நடைபெறுகிறது. சிபிஎஸ்இ பள்ளிகளில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை கற்பிக்க இந்தத் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்தத் தேர்வுக்கான புகைப்படம், கையெழுத்துடன் கூடிய அனுமதிச் சீட்டு www.ctet.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அனுமதிச் சீட்டில் ஏதேனும் தவறுகள் இருந்தால், வரும் 11-ஆம் தேதிக்குள் அதை தேர்வுப் பிரிவில் தெரிவித்து, குறைகளைச் சரி செய்து கொள்ளலாம். அந்தத் தேதிக்குப் பிறகு விவரங்களைத் திருத்துவதற்கு அனுமதி வழங்கப்படாது என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.