Pages

Tuesday, September 15, 2015

ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சி

பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உள்ள ஆசிரியர் களுக்கு ஆங்கிலப்பயிற்சி முகாம் வட்டார வள மையத்தில் நடந்தது.


உதவித்தொடக்க கல்வி அலுவலர் மற்றும் மேற்பார்வையாளர் (பொ) கவிதா ஆகியோர் பயிற்சியை துவக்கி வைத்தனர். மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக படிப்பதற்கு, மிக எளிய பயிற்சிகள், சிறு விளையாட்டின் மூலம் படிப்பதற்கும், எழுதுவதற்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.

மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசுவதற்கு பல படிநிலைகளில் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், 30 ஆசிரியர்கள் பங்கேற்றனர். இரண்டு கட்டமாக பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. பயிற்சியினை அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுனர்கள் அளித்தனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.