Pages

Thursday, September 17, 2015

திறந்தநிலை பல்கலை.க்கு யுஜிசி அங்கீகாரம் நீட்டிப்பு

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்துக்கு, பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) அங்கீகாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது என, அந்தப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சந்திரகாந்தா ஜெயபாலன் கூறினார். இதுகுறித்து சென்னையில் புதன்கிழமை அவர் அளித்த பேட்டி: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்துக்கு யுஜிசி அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது போன்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. அது தவறான தகவலாகும்.

தொலைநிலைப் படிப்புகளை வழங்கும் பல்கலைக்கழகங்கள் ஒவ்வொரு ஆண்டும் யுஜிசி-யிடம் அங்கீகார நீட்டிப்பு பெற வேண்டும் என்பது வழக்கமான நடைமுறை.அதன்படி, 2015-16 ஆம் ஆண்டுக்கு அங்கீகார நீட்டிப்புக்கு பல்கலைக்கழகம் விண்ணப்பித்திருந்தது. தற்போது, அங்கீகார நீட்டிப்பை யுஜிசி வழங்கியிருக்கிறது.மேலும், பல்கலைக்கழகத்துக்கு 12(பி) தகுதியைப் பெறுவதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. விரைவில் இந்தத் தகுதியும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.