Pages

Saturday, September 12, 2015

கடந்த 4 ஆண்டுகளில் 277 மெட்ரிக். பள்ளிகளுக்கு அனுமதி

கடந்த 4 ஆண்டுகளில் புதிதாக 277 மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில், மெட்ரிக். பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 11 லட்சம் அதிகரித்துள்ளது.


கடந்த 2011-12 கல்வியாண்டில் தமிழகத்தில் 3,769 மெட்ரிக். பள்ளிகள் இருந்தன. இவற்றில் 25 லட்சத்து 55 ஆயிரத்து 625 மாணவர்கள் படித்து வந்தனர். இந்த எண்ணிக்கை 4 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. இந்தப் பள்ளிகளில் 2014-15 ஆண்டு நிலவரப்படி, 36 லட்சத்து 56 ஆயிரத்து 317 பேர் படிக்கின்றனர்.

இதில், 2014-15 கல்வியாண்டில் மட்டும் 156 புதிய மெட்ரிக். பள்ளிகளுக்கும், 195 மெட்ரிக். பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தவும் ஆணை வழங்கப்பட்டுள்ளது.

ஆரம்ப நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு தாற்காலிக அங்கீகாரமும், அதைத் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தொடர் அங்கீகாரமும் வழங்கப்படுகின்றன. 

நிகழ் கல்வியாண்டில் (2015-16) அங்கீகாரம் கோரி விண்ணப்பிக்கும் பள்ளிகளின் எண்ணிக்கை டிசம்பரில்தான் தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.