Pages

Thursday, September 17, 2015

ஆண்டுக்கு 35 லட்சம் ரூபாய் சம்பளம் அறிவித்தும் ஆசிரியர் பணிக்கு ஆள் இல்லாமல் தவிக்கும் பள்ளி

இங்கிலாந்து அருகே உள்ள "தீபகற்ப" கிராமத்தில் ஐந்தே மாணவர்கள் உள்ள பள்ளியில் பணியாற்ற ஆண்டுக்கு ரூ. 35 லட்சம் சம்பளம் கொடுப்பதாகக் கூறியும்  ஆசிரியர் வேலைக்கு ஆட்கள் கிடைக்கவில்லையாம்.40 குடுமபங்கள் வசித்து வரும் இந்த இயற்கை எழில் கொஞ்சும் தீபகற்ப கிராமத்தில் மருத்துவமனை, தபால் நிலையம் உள்ளிட்ட எந்த வசதிகளும் இல்லை. வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டும் தபால்காரர் வருவாராம்.
இங்குள்ள மக்கள் இப்பகுதியிலேயே தங்களுக்குத் தேவையானதை உருவாக்கிக் கொள்வதால் அவர்களும் அதிக அளவில் வெளியில் செல்வதில்லையாம். ஒரு பள்ளி.. 5 மாணவர்கள் இங்கு ஒரு பள்ளியும் உள்ளது. அதில் ஐந்து மாணவர்கள் உள்ளனர்.

ஆனால், இவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க ஆசிரியர்தான் இல்லை. தற்போது இந்தப் பள்ளியின் மாணவர்களுக்கு, அவ்வப்போது வெளியில் இருந்து வந்து மாணவர்களே வகுப்பெடுக்கின்றனர். எனவே இந்த ஆசிரியர் பணிக்கு அதிகபட்சமாக ஆண்டுக்கு முப்பத்தந்து ஆயிரம் பவுண்ட்கள் (இந்திய மதிப்பில் 35 லட்ச ரூபாய்) என இரண்டு முறை ஆசிரியர் தேவை விளம்பரம் அளித்தும் யாரும் விண்ணப்பிக்க முன்வரவில்லை. 
எளிதில் வந்து போக முடியாத அளவிலான தொலை தூர கிராமம் என்பதால் யாரும் வேலைக்கு வரத் தயங்குகிறார்களாம்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.