Pages

Tuesday, September 29, 2015

சத்துணவு ஊழியர்கள் போராட்டம்: சென்னையில் 3,000 பேர் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் திங்கள்கிழமை போராட்டம் நடத்திய சத்துணவு ஊழியர்கள் 3,000 பேர் கைது செய்யப்பட்டனர்.
சத்துணவு ஊழியர்களை முழுநேர அரசு ஊழியர்களாக அறிவித்து ஊதிய குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஊதியம் வழங்குதல், ஓய்வூதியம் உயர்த்துதல், பணி நிரந்தரம், பதவி உயர்வு என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி, சத்துணவு ஊழியர்கள் தொடர்சியாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.


இந்த நிலையில், சத்துணவு ஊழியர்கள் எழும்பூர் ராஜரத்தினம் அரங்கத்தில் இருந்து தலைமைச் செயலகத்தை நோக்கி திங்கள்கிழமை ஊர்வலமாகப் புறப்பட்டனர். இவர்களை எழும்பூர் லாங்க்ஸ் கார்டன் சாலை அருகே போலீஸார் தடுத்து நிறுத்தினர்.பின்னர் சங்கப் பிரதிநிதிகள் அரசு பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தச் சென்றனர். ஆனால், பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படாததால் அவர்கள் தலைமைச் செயலக வளாகத்தில் போராட்டம் நடத்தினர். இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதையறிந்த ஊழியர்கள் எழும்பூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அவர்கள் தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணியாகச் செல்ல முற்பட்டனர். இவர்களை போலீஸார் தடுத்ததால், அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 
அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் லேசான தடியடியும் நடத்தினர்.இதையடுத்து, சுமார் 3000 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் சமூக நலக் கூடங்களிலும், திருமண மண்டபங்களிலும் தங்க வைக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.