
அதன்படி, கலந்தாய்வு செப்டம்பர் 28-ம் தேதி தொடங்கி அக்டோபர் 5-ம் தேதி வரை காலை 9 முதல் பகல் 1 மணி வரையும், பிற்பகல் 1 முதல் மாலை 5 மணி வரையும் நடைபெறும்.
சென்னை திருவல்லிக்கேணி யில் உள்ள லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத் தில் கலந்தாய்வு நடைபெறும். இதற்கான அழைப்புக்கடிதம் விண்ணப்பதாரர்களுக்கு செப்டம்பர் 16-ம் தேதி முதல் அனுப்பப்படும் என்றும் எஸ்எம்எஸ் மூலமாகவும் அவர்களுக்கு தகவல் அனுப்பப் படும் என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு வரையில் அரசு மற்றும் அரசு கல்வியியல் கல்லூரி களில் ஏறத்தாழ 2,100 பி.எட். இடங்கள் ஒற்றைச்சாளர முறையில் (சிங்கில் விண்டோ சிஸ்டம்) கலந் தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வந்தன.
இந்த ஆண்டு, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்சிடிஇ) புதிய விதிமுறை காரணமாக, கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் பி.எட். இடங்களின் எண்ணிக்கை 1,777 ஆக குறைந்துவிட்டது. எனவே, இந்த ஆண்டு பி.எட். படிப்புக்கான கட் ஆப் மதிப்பெண் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.