Pages

Friday, September 4, 2015

சிறையில் ஆசிரியர் பணியிடம் செப்., 18ல் நேர்காணல்

கோவை மத்திய சிறையில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியருக்கான நான்கு பணியிடங்களுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மத்திய சிறை கண்காணிப்பாளர் பழனி வெளியிட்ட அறிக்கை: கோவை மத்திய சிறையில், காலியாக உள்ள நான்கு இடைநிலை ஆசிரியர் பணியிடத்துக்கு, ஆசிரியர் பட்டயப்படிப்புடன், இரண்டு ஆண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பொதுப்போட்டி, இன சுழற்சி அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும். 


பொதுப்பிரிவினருக்கு 30 வயதும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 32 வயதும், தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கு, 35 வயது 2015 (ஜன.,1ன்படி) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இத்தகுதிகள் உடையவர்கள், உரிய கல்விச்சான்றிதழ், முன் அனுபவம்-ஜாதி-முன்னுரிமைச் சான்றிதழுடன், வரும் 18ம் தேதி காலை, 11:00 மணியளவில், கோவை மத்திய சிறைக் கண்காணிப்பாளர், முன் ஆஜராக வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.