Pages

Monday, August 31, 2015

தலைமை ஆசிரியர்கள் போராட முடிவு

அரசின் இலவச நலத்திட்டத்திற்கு தனி உதவியாளர் மற்றும் ஆதார் அட்டை பணியை வருவாய்துறையினரிடம் ஒப்படைக்க கோரி தலைமை ஆசிரியர் சங்கத்தினர் போராட முடிவு செய்துள்ளனர். அரசு, பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள், மடிக்கணிணி உட்பட 14 வகை நலத்திட்ட உதவிகளை வழங்குகிறது.

இவற்றை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே பெற்று, வினியோகம் செய்யவேண்டும். இதனால் கற்றல், கற்பித்தல் பணியில் சுணக்கம்ஏற்படுகிறது.இச்சூழலில் தலைமை ஆசிரியர்களுக்கு அரசு விடுத்துள்ள உத்தரவில், பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஆதார் அட்டை வழங்க மக்கள் தொகை கணக்கெடுப்பு படி குடும்பத்தாரின் பட்டியலை தலைமை ஆசிரியர்கள் சேகரிக்கவேண்டும் என தெரிவித்தது. இதை தலைமை ஆசிரியர் சங்கத்தினர் எதிர்க்கின்றனர்.
இது குறித்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாநில பிரச்சார செயலாளர் பாலசுப்பிரமணியன் கூறும்போது: இலவச சைக்கிள், மடிக்கணிணி மட்டுமே பள்ளிக்கே நேரடியாக வருகிறது.பாட புத்தகம், வரைபட பெட்டி உட்பட இதர பொருட்களை பள்ளி தலைமை ஆசிரியர்கள் தான், மாவட்ட அலுவலகத்திற்கு சென்று வாங்கி வரவேண்டும்.
இதில், ஆதார் அட்டை முகாமுக்கு முன்னேற்பாட்டை செய்ய கூறுவது பணிச்சுமையை காண்பிக்கும். இதனால், மாணவர்களின் கல்வி தரம் பாதிக்கப்படும். எனவே நலத்திட்டங்களுக்கு என்று தனி உதவியாளரை நியமிக்கவும், மடிக்கணிணிகளை பாதுகாக்க மாற்று பணியில் காவலாளியை நியமிக்கவேண்டும்.ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கை குழுவுடன் இணைந்து போராடுவோம்,” என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.