Pages

Thursday, August 20, 2015

பள்ளி மாணவர்கள் புத்தக சுமை: தமிழக பாணியை பின்பற்ற முடிவு

தமிழகத்தில், பள்ளி மாணவர்களின் புத்தகச்சுமையை குறைக்க, தமிழக அரசு மேற்கொள்ளும் முறையை, அனைத்து மாநிலங்களும் பின்பற்ற, மத்திய அரசு விரைவில் அறிவுறுத்த உள்ளது. மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தலைமையில், கல்வி தொடர்பான மத்திய ஆலோசனை குழு கூட்டம், டில்லியில் நேற்று நடைபெற்றது.


அனைத்து மாநில கல்வி அமைச்சர்களும் பங்கேற்ற அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளாவன: கடந்த, 2010 முதல், தமிழக பள்ளி மாணவர்களின் புத்தக சுமையை குறைக்க பல நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது. சமச்சீர் கல்வி, முப்பருவ கல்வித் திட்டத்தின் படி, பாட புத்தகங்களை மூன்றாக பிரித்தல் என, புத்தகப் பை எடை கூடாமல் பார்த்துக் கொள்ளப்படுகிறது. அதுபோல, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களிலும், புத்தக சுமையை குறைக்க பல நவீன முறைகள் பின்பற்றப்படுகின்றன. அவற்றை இணைத்து, தேசிய அளவில் விரைவில் புதிய கொள்கை பின்பற்றப்படும்.
இவ்வாறு, அந்த கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டன.
மேலும், 8ம் வகுப்பு வரை, மாணவர்களை தோல்வி அடையச் செய்யக் கூடாது என்ற சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; மீண்டும், 10ம் வகுப்புக்கு வாரியத் தேர்வு நடத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை மாநில அரசுகள் முன்வைத்தன. அதை, எழுத்துப்பூர்வமாக அளிக்குமாறு, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கேட்டுக் கொண்டார்.
எட்டாம் வகுப்பு வரை, மாணவர்களை தோல்வி அடையச் செய்யக் கூடாது என்ற சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; மீண்டும், 10ம் வகுப்புக்கு வாரியத் தேர்வு நடத்த வேண்டும்

1 comment:

  1. கண்ணை மூடிக்கொண்டு எதையும் சொல்லக்கூடாது புத்தகசுமை குறைந்துள்ளதா மனசாட்சி உள்ளவர் இதை சொல்ல மாட்டார் மெட்ரிக் பள்ளிகளில் செமெஸ்டெர் புக் தவிர அவர்கள் வைத்திருக்கும் புக் என இரு மடங்கு கூடி உள்ளது

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.