ஆனைமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியருக்கு, பொதுத்தேர்வை எதிர் கொள்வது எப்படி என்பதை பற்றி ஆலோசனை வழங்கப்பட்டது.
ஆனைமலையில், வி.ஆர்.டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 12ம் வகுப்பு பயிலும் மாணவியர் 198 பேர் உள்ளனர். அவர்களுக்கு வருகின்ற பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறவும், தேர்வினை பயமின்றி எதிர் கொள்ளவும் ஆலோசனை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், பொள்ளாச்சி கல்வி மாவட்ட அலுவலர் நடராஜ் பேசியதாவது:
அதிக மதிப்பெண் பெற திட்டமிட்டு, ஆர்வமுடன் அதிகாலையில் எழுந்து படிக்க வேண்டும். தன்னம்பிக்கை வளர்த்துக்கொள்ள வேண்டும். யோக பயிற்சி மேற்கொள்வதின் மூலம் ஞாபக சக்தியை வளர்த்துக்கொள்ளலாம்.
மனமும் உடலும் ஆரோக்கியமாக இருந்தால் தான், ஒரு மனிதன் சிறப்பாக சிந்தித்து செயல்பட முடியும். மனம் ஆரோக்கியமாக இருக்க யோகாவும், உடல் ஆரோக்கியத்திற்கு சத்தான உணவுகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
மேலும், நீ எதுவாக நினைக்கின்றயோ அதுவாகவே ஆகின்றாய் என்ற கீதை பேருரைக்கேற்ப, உயர்ந்த லட்சியங்களை மனத்தில் ஏற்படுத்தி கொள்ளுங்கள் அதற்காக உழைத்திடுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார். இதில், தலைமையாசிரியர் கலாராணி, உதவி தலைமை ஆசிரியர் லட்சுமி காந்தன், ஆசிரியர் ஜெயக்குமார் மற்றும் ஆசிரியர்கள், மாணவியர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.