Pages

Wednesday, August 26, 2015

7வது ஊதியக்குழு பரிந்துரைகள் சமர்ப்பிக்க காலக்கெடு டிசம்பர் 31 வரை நீடிப்பு

48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தையும், 55 லட்சம் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தையும் மாற்றி அமைப்பதற்காக நீதிபதி ஏ.கே. மாத்தூர்
தலைமையில் 7–வது சம்பள கமிஷனை முந்தைய மன்மோகன் சிங் அரசு அமைத்தது.

10 ஆண்டுகளுக்கு ஒரு முறை இப்படி சம்பள கமிஷன்
அமைப்பது வழக்கமான ஒன்றாகும்.7–வது சம்பள கமிஷன்,
தனது பரிந்துரைகளை இறுதி செய்யும் பணியில்
ஈடுபட்டுள்ளது.அறிக்கை தாக்கல் செய்வது தொடர்பாக
நீதிபதி ஏ.கே. மாத்தூர், டெல்லியில் நேற்றுசெய்தி
நிறுவனம் ஒன்றிடம் பேசினார். அப்போது அவர், ‘‘7–வது
சம்பள கமிஷன் அறிக்கை அடுத்த மாத இறுதியில்
அரசிடம் தாக்கல் செய்யப்படும்’’ என கூறினார்.இந்த சம்பள
கமிஷனின் பரிந்துரைகள், அடுத்த ஆண்டு ஜனவரி 1–ந்
தேதி முதல் அமலுக்கு வரும்.
ஆனால் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை
கூட்டத்தில்  7 வது ஊதியக்குழு பரிந்துரைகள்
சமர்ப்பிக்க காலக்கெடு டிசம்பர் 31 வரை நீடிப்பது என
முடிவு செய்யப்பட்டது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.