Pages

Wednesday, August 26, 2015

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 6 சதவீதம் உயர்த்தப்படவுள்ளது; அடுத்த மாதம் நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதே போல் இந்த ஆண்டும் ஜூலை மாதத்திற்கு உரிய அகவிலைப்படி 6 சதவீதம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது 113 சதவீத அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. இது 119 சதவீதமாக உயருகிறது. அகவிலைப்படி உயர்வு குறித்து அடுத்த மாதம் (செப்டம்பர்) மத்திய மந்திரி சபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட இருக்கிறது. ஜூலை மாதம் முதல் கணக்கிட்டு இந்த 6 சதவீத அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இதன் மூலம் 40 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 30 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவார்கள்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.