Pages

Sunday, August 30, 2015

அறிவியல் 'இன்ஸ்பயர்' விருது: இறுதி போட்டிக்கு 460 பேர் தகுதி

தமிழக அரசின், 'புத்தாக்க அறிவியல் விருது' இறுதிப் போட்டிக்கு, 460 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். சென்னை கல்வி மாவட்டத்திலிருந்து, 34 மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்கின்றனர். தமிழக அரசு சார்பில், பள்ளி மாணவர்களுக்கு, 'இன்ஸ்பயர்' என்ற புத்தாக்க அறிவியல் விருது வழங்கப்படுகிறது. 

மாவட்ட போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இதில், தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, வரும், 5, 6ம் தேதிகளில், மாநில அளவிலான இறுதிப் போட்டி, நாமக்கல், மகேந்திரா இன்ஜினியரிங் கல்லுாரி வளாகத்தில் நடக்கிறது. இந்த இறுதிப் போட்டிக்கு, 460 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சென்னை கல்வி மாவட்டத்திலிருந்து, 34 பேர், இறுதிப் போட்டிக்கு செல்ல உள்ளனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.