Pages

Monday, August 24, 2015

30 ஆயிரம் பேர் எழுதிய 'சிவில் சர்வீசஸ்' தேர்வு

ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட, 24 துறை பதவிகளுக்கான, சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வை, தமிழகத்தில், 30 ஆயிரம் பேர் எழுதினர்.சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வு, நேற்று நாடு முழுவதும், 71 நகரங்களில், 2,000 மையங்களில் நடந்தது; 9.45 லட்சம் பேர் தேர்வெழுதினர்.தமிழகத்தில், சென்னை, மதுரை, கோவை, திருச்சி மற்றும் வேலுாரில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இதில், 30 ஆயிரம் பேர், காலையிலும், பிற்பகலிலும் நடந்த தேர்வில் பங்கேற்றனர். அதேபோல், புதுவையில் அமைக்கப்பட்ட மையங்களில், 3,300 பேர் பங்கேற்றனர்.காலையில் இரண்டு மணி நேரம், முதல் தாளும், பிற்பகலில் இரண்டாம் தாளுக்கும் தேர்வு நடந்தது. 


இரண்டாம் தாளில், கட்டாயம், 33 சதவீதம் மதிப்பெண் எடுத்தால் மட்டுமே, அடுத்தகட்ட மெயின் தேர்வு எழுத முடியும் என்ற நிபந்தனையுடன், ஆங்கிலம் மற்றும் இந்தியில் வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன.தற்கால அரசியல் மற்றும் முக்கிய நிகழ்வுகள், இந்திய வரலாறு, உலக புவி அமைப்பு, சமூக, பொருளாதார ரீதியிலான இந்திய மற்றும் உலக வரலாறு, சமூகவியல் திட்டங்கள், பருவநிலை மாற்றம் மற்றும் பொது அறிவியல் குறித்த கேள்விகள் முதல்தாளில் இடம்பெற்றன. இரண்டாம் தாளில், சர்வதேச மொழித்திறன், பகுப்பாய்வுத் திறன், பிரச்னைகளை தீர்க்கும் திறன், முடிவு எடுக்கும் திறன், பொது அறிவுத்திறன், 10ம் வகுப்பு அடிப்படையிலான பொது கணிதத்திறன் குறித்த வினாக்கள் இடம் பெற்றன.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.