Pages

Friday, August 28, 2015

கால்நடைத் துறையில் 1,101 பணிகள் செப்.,-குள் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையில் 1,101 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.இதில், கால்நடை ஆய்வாளர் பயிற்சிக்கு 294 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்வு செய்யப்படுவோருக்கு 11 மாத பயிற்சிக்குப்பின் நியமன ஆணை வழங்கப்படும்.


'கதிரியக்கர்' (ரேடியோகிராபர்) பணியில் ௨௪ இடங்களுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் உதவி 'ரேடியாலாஜி கோர்ஸ்' தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது இயற்பியலில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.'ஆய்வக உடனாள்' பணியில் 17 இடங்களுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். 'ஆய்வுக்கூட தொழில் நுட்பர்' பணியில் 2 இடங்களுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் சென்னை கால்நடைக் கல்லுாரியில் 'லேபரட்டரி டெக்னீசியன்' முடித்திருக்க வேண்டும்.
'மின்னாளர்' பணியில் மூன்று இடங்களுக்கு 10ம் வகுப்பு மற்றும் எலக்ட்ரிகல் ஒயரிங் படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அலுவலக உதவியாளர் பணியில் 36 இடங்களுக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.கால்நடை பராமரிப்பு உதவியாளர் 725 பணியிடங்களுக்கு எட்டாம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.tn.gov.in/job opportunity என்ற இணையதள முகவரில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம். அதை பூர்த்தி செய்து செப்.,15 க்குள் 'இயக்குனர், கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப்பணி, சென்னை 600 006' என்ற முகவரிக்கு
அனுப்பவேண்டும்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.