Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, August 7, 2015

    இடமாறுதல் வேண்டி விண்ணப்பித்த, 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் விண்ணப்பங்கள், இறுதி நாளில் நிராகரிக்கப்பட்டதால், சர்ச்சை!

    கோவை மாவட்டத்தில் இடமாறுதல் வேண்டி விண்ணப்பித்த, 100க்கும் மேற்பட்டஆசிரியர்களின் விண்ணப்பங்கள், இறுதி நாளில் நிராகரிக்கப்பட்டதால், சர்ச்சை ஏற்பட்டது. நடப்பு கல்வியாண்டிற்கான, பொது மாறுதல் கலந்தாய்வு, வரும் 12முதல் ௨௯ம் தேதி வரை நடக்கின்றன. இதற்காக விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க இன்றுஇறுதி நாள்.

    இந்நிலையில், கோவை உட்பட பிற மாவட்டங்களில், நுாற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதால், கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.கலந்தாய்வில் பங்கேற்க சம்பந்தப்பட்ட ஆசிரியர் அந்த பள்ளியில் குறைந்தபட்சம், மூன்று கல்வியாண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டு, 2012 ஜூன் முதல் தேதி, தகுதி நாளாக அறிவிக்கப்பட்டது.

    இதற்கு ஆசிரியர்களிடம் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, குறைந்தபட்சம் ஒரு கல்வியாண்டு போதும் என நிபந்தனை தளர்த்தப்பட்டது. புதிய விதிமுறைப்படி, 2014 ஜூன் முதல் தேதிதகுதி நாளாக அறிவுறுத்தப்பட்டது. ஆனால் கடந்தாண்டு, ஜூலை 23ம் தேதி தான்ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டது. ஓராண்டுகளாக விதிமுறைகள் தளர்த்தப்பட்டு இருந்தாலும், இரண்டு ஆண்டுகள் பணி புரிந்துள்ளவர்கள் மட்டுமே, இக்கலந்தாய்வில் பங்கேற்க முடியும்.
    இந்நிலையில், கோவையில் நேற்று இடமாறுதல் வேண்டி ஆசிரியர்கள் சமர்ப்பித்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. சில ஆசிரியர்கள் அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், சர்ச்சை ஏற்பட்டது.
    கடந்த ஆண்டு காலதாமதமாக கலந்தாய்வு நடத்தியதற்கு ஆசிரியர்கள் எப்படி பொறுப்பேற்க இயலும்? ஜூலை மாதம் கலந்தாய்வு நடத்தி விட்டு, ஜூன், 1ம் தேதியை தகுதி நாளாக அறிவித்துள்ளது சரியல்ல. இதனால், நுாற்றுக்கணக்கான ஆசிரியர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. கடந்த, 2010ல் அரசு உத்தரவில், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டிருந்தனர். மே மாதம் கலந்தாய்வுக்கான உத்தரவு பெற்றிருப்பினும், புதிய பள்ளிகளில் ஆக., 2ம் தேதி பணியில் சேர்ந்தோம். 2011ம் ஆண்டிற்கான கலந்தாய்வில், ஆக., 2ல் பணியில் சேர்ந்தவர்களும் பங்கேற்கலாம் என, விதிமுறையில் தெளிவாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
    'விதிமுறைப்படி தான் பணி'
    மாவட்ட கல்வி அதிகாரி (பொறுப்பு) கீதா கூறுகையில், ''கலந்தாய்வு விண்ணப்பங்கள் பெறும் பணி தற்போது நடந்துவருகிறது. முழுமையாக பணி முடிந்த பின்பே, நிராகரித்த விண்ணப்பங்களின் எண்ணிக்கையை தெளிவாக தெரிவிக்க இயலும்.அரசு விதிமுறைப்படி, ஓராண்டுகள் நிறைவடையாவிடில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். விதிமுறைகளின் படி பணிகள் முறையாக மேற்கொள்ளப்படுகிறது,'' என்றார்.

    3 comments:

    Unknown said...

    MUTUAL TRANSFER= B.T.ASST .ENGLISH. MEALMARUVATHUR. KANGIPURAM.d.t ....to ...SALEM.. Namakkal... Dharmapuri.... Erode......pls contact=8012998093..7667724789......

    Unknown said...

    MUTUAL TRANSFER .B.T .TAMIL....SALEM dt .EDDAPADI TO NAMAKKAL DT ....pls contact= +91 98 42 482281... +91 95 78 263281.......

    đa said...

    dong tam
    game mu
    cho thuê phòng trọ
    cho thuê phòng trọ
    nhạc sàn cực mạnh
    tư vấn pháp luật qua điện thoại
    công ty luật hà nội
    số điện thoại tư vấn luật
    dịch vụ thành lập doanh nghiệp