Pages

Tuesday, July 21, 2015

புதிய கல்வித் திட்டத்துக்கான கருத்துக்கேட்பு கூட்டம் தள்ளிவைப்பு

புதிய கல்வித்திட்டம் தொடர்பான கலந்தாய்வு மற்றும் கருத்து கேட்புக்கூட்டத்தை தமிழகம் முழுவதும் நடத்த மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும்  பயிற்சி நிறுவனம் திட்டமிட்டிருந்தது. இந்த கருத்து கேட்புக்கூட்டத்தில் பங்கேற்க, தலைமையாசிரியர்களின் பெயர் பட்டியல், கூட்டம் நடத்தப்பட வேண்டிய  இடம் உள்ளிட்ட விவரங்களை அனுப்பி வைக்குமாறு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தை மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்  கேட்டிருந்தது.
அதன்படி மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இருந்து தலைமையாசிரியர்களின் பெயர் பட்டியல் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி  நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

கருத்துகேட்பு தொடர்பான முதல் கூட்டத்தை நேற்று காலை மதுரையில் நடைபெறுவதாக இருந்தது.  இந்நிலையில், புதிய கல்வித்திட்டம் தொடர்பான  கருத்து கேட்புக்கூட்டத்தை மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தேதி குறிப்பிடாமல் திடீரென தள்ளி வைத்தது. இதற்கான தேதி, பின்னர்  தெரிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.