Pages

Sunday, July 19, 2015

மூங்கிலால் ஆன சேர்க்கைக் கடிதம்!

பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பதற்கான மாணவர் சேர்க்கைக் கடிதத்தை மூங்கிலால் ஆன தாளில் அச்சிட்டு அளித்து புதுமை செய்துள்ளது சீனப் பல்கலைக்கழகம். சீனாவின் ஹாங்ஜு மாகாணத்தில் உள்ள ஜெஜியாங் வேளாண் மற்றும் வனவியல் பல்கலைக்கழகம் இந்தப் புதுமையைச் செய்துள்ளது.

மூங்கிலை மிக மெல்லிதாகச் சீவி, அதனைப் பதப்படுத்தி காகிதம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை அந்தப் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது. இந்தக் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக் கடிதத்தை, அவ்வாறு தயாரிக்கப்பட்ட காகிதத்தில் அச்சிட்டு மாணவர்களுக்கு அனுப்பியுள்ளது அந்தப் பல்கலைக்கழகம். மூங்கிலிலிருந்து தயாரிக்கப்பட்ட காகித உற்பத்தி விலை குறைவு. மிகவும் பாதுகாப்பானது.
 புதுமையான முயற்சி என்பதுடன், வேளாண் பாடம் குறித்து மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக, புதிய மாணவர்களுக்கான சேர்க்கைக் கடிதம், மூங்கில் காகிதத்தில் அச்சிட்டு அனுப்பப்பட்டது என்று பல்கலைக்கழக 
 அதிகாரியொருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.