Pages

Tuesday, July 7, 2015

பாடத்திட்டமே வரவில்லை; பயிற்றுவிப்பதில் பெரும் குழப்பம்! : சிறப்பாசிரியர்கள் பாடு திண்டாட்டம்

சிறப்புப் பாடங்களுக்கான பாடத்திட்டம் வெளியிடப்படாததால், பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது. நடப்பாண்டு கல்வித்திட்டத்தில் இசை, ஓவியம், தையல், கட்டடக் கலை, தோட்டக் கலை, வாழ்வியல் திறன் போன்ற பாட போதிப்பு முறை தொடர்பாக, எஸ்.எஸ்.ஏ., சார்பில், சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், 'பகுதி நேர, முழு நேர சிறப்பாசிரியர்கள், பாடக்குறிப்பு (நோட்ஸ் ஆப் லெசன்) எழுதும் நடைமுறையை பின்பற்ற வேண்டும்; அதனுடன், அரசு வெளியிட்டுள்ள பாடத்திட்டத்தையும் (சிலபஸ்) இணைக்க வேண்டும்; ஒவ்வொரு பருவம் முடிந்த பின்பும், அந்த பாடத்தில் மாணவர்களின் மதிப்பெண்களை கிரேடு முறையில் கணக்கிட்டு, பதிவேடில் பதிவு செய்ய வேண்டும்' என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


அரசால் வெளியிடப்பட்ட பாடத்திட்டத்தை, அந்தந்த முதன்மை கல்வி அலுவலர்களிடம் இருந்து பள்ளிகள் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது. ஆனால், பல மாவட்டங்களில், ஓவிய ஆசிரியர்களுக்கு, 'சிலபஸ்' வழங்கப்படவில்லை. 'சிலபஸ்' வந்து சேராததால், எந்த முறையில் பாடம் கற்பிப்பது என தெரியாமல் ஆசிரியர்கள் குழம்பிப் போய் உள்ளனர்; தங்கள் விருப்பம் போல், பாடங்களை கற்பித்து வருகின்றனர்.

விருதுநகர் உட்பட ஒரு சில மாவட்டங்களில், கடந்தாண்டு, அக்., மாதம் அரசால் வெளியிடப்பட்ட 'சிலபஸ்', பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு, அதனடிப்படையில், சிறப்பு பாடங்கள் போதிக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான மாவட்டங்களில், முதன்மை கல்வி அலுவலகங்கள் மூலம், பள்ளிகளுக்கு 'சிலபஸ்' வழங்கப்படவில்லை.

ஓவிய ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், 'தற்போது ஓவியம் உட்பட சிறப்பு பாடங்கள் போதிக்கும் முறையை, அவ்வப்போது கல்வி அதிகாரிகள் தணிக்கை செய்கின்றனர்.

தணிக்கையின் போது, 'சிலபஸ்' இல்லாமல் பாடம் நடத்தக் கூடாது என, கூறுகின்றனர். ஆனால், கல்வித்துறை சார்பில் இதுவரை 'சிலபஸ்' வழங்கப்படவில்லை; இதனால், குழப்பம் நீடிக்கிறது' என்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.