Pages

Monday, July 13, 2015

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும்'டெட்' தேர்வு கட்டாயமா?

தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வான 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற உத்தரவுக்கு தனியார் பள்ளிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 'அரசு அரசு உதவிப் பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயமாக 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்' என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அடுத்த ஆண்டு நவம்பருக்குள் தேர்ச்சி பெற வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து தனியார் நர்சரி பிரைமரி மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் சங்க பொதுச் செயலர் நந்தக்குமார் கூறியதாவது: 'டெட்' தேர்வு தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயம் என்றால் அவர்கள் 'டெட்' தேர்வை முடித்து விட்டு அரசு பள்ளிகளுக்கு சென்று விடுவர். இதனால் தனியார் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்படும். தனியார் பள்ளிகள் மீண்டும் புதிய ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.கட்டாய கல்வி சட்டப்படி தனியார் பள்ளிகளுக்கான 97 கோடி ரூபாயை உடனே வழங்க வேண்டும்; விரைவில் அங்கீகாரம் தர வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 25ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் பள்ளி நிர்வாகிகள் சார்பில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.