2006ல் ஆட்சிக்கு வந்த திமுக அரசு கல்வியில் சீர்திருத்தம் ஏற்படுத்த எண்ணியது. அதுவரை இருந்த 4 வகையான கல்வி வாரியங்களை கலைத்து, 2008-2009ம் கல்வி ஆண்டில் பொதுக் கல்வி வாரியத்தை கொண்டு வந்தது. 2010ல் இது நடைமுறைக்கும் வந்தது. இதன் தொடர்ச்சியாக அனைவருக்கும் பொதுவான சமச்சீர் கல்வி வந்தது. ஆனால், அதிமுக ஆட்சிக்கு வந்ததும், 2013ல், சமச்சீர் கல்விப் பாடப்புத்தகங்கள் சரியில்லை என்று கூறி முடக்கியது.
இதற்கு பொதுமக்கள் இடையே பலத்த எதிர்ப்பு வந்தது. அரசு தரப்பில் ஏற்கவில்லை. சமச்சீர் கல்வி தொடர்பான சர்ச்சை நீதிமன்றத்துக்கு சென்றது. இதற்கிடையே முன்பிருந்தபடியே பாடப்புத்தகங்களை அச்சிட்டு குவித்தனர்.
உச்ச நீதிமன்றம் சமச்சீர் கல்வியை கொண்டு வர உத்தரவிட்டது. ஆனால், சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களில் இடம் பெற்ற திருவள்ளுவர் உருவம், செம்மொழி மாநாட்டு வாசகம், செம்ெமாழி குறித்த பாடம், பாடல்கள் ஆகியவற்றை ஸ்டிக்கர் ஒட்டி மறைத்து வழங்க அரசு உத்தரவிட்டது. இதனால் 2013 மே மாதம் வழங்கப்பட வேண்டிய பாடப்புத்தகங்கள் 3 மாதம் தாமதமாக வழங்கப்பட்டன. இதற்குள் மாணவர்கள் காலாண்டுத் தேர்வு எழுத வேண்டிய காலகட்டத்தில் இருந்தனர்.
ஒரு வழியாக 2013ம் ஆண்டை மாணவர்கள் குழப்பத்துடன் கடத்தினர். 2013-2014ம் ஆண்டில் முப்பருவ முறையை அதிமுக அரசு கொண்டு வந்தது. தொடக்கத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரை கொண்டுவரப்பட்டது. அடுத்தடுத்த ஆண்டுகளில் 9ம் வகுப்புவரை இந்த முப்பருவ முறை தொடர்ந்தது. இதன்படி ஒவ்வொரு ஆண்டும் மே, செப்டம்பர், ஜனவரி மாதங்களில் மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.