விருதுநகர் மாவட்டத்தில் கடல்சார்ந்த கல்வி பயிலும் மீனவ இளைஞர்களிடம் கல்வி உதவித் தொகை பெற மீனவள உதவி இயக்குநர் அலுவலகம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆட்சியர் வே.ராஜாராமன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்: கடல்சார் கல்வி பயின்று வரும் மீனவ இளைஞர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவதற்காக அரசு ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது. அதன் அடிப்படையில் குறிப்பிட்ட 6 கடல்சார் படிப்புகள் மட்டும் உதவி தொகை பெறுவதற்கு தகுதியுள்ளதாகவும் அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில், மாலுமியல் பட்டய படிப்பு, கடல்சார் பொறியியல் பட்டப்படிப்பு, கடல் சார்ந்த பட்டய படிப்பு, படகு உதவியாளருக்கான ஒரு வருட படிப்பு, இளங்கலை பொறியாளர்களுக்கான ஒரு வருட கடல் சார்ந்த பொறியியல் படிப்பு, 3 ஆண்டுகள் மாலுமியல் படிப்புகளுக்கு மட்டும் உதவித் தொகை வழங்கப்பட இருக்கிறது.
எனவே தகுதியுள்ள மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்களின் மகன், மகள் ஆகியோர் கடல் சார்ந்த படிப்புக்கான முழு விவரங்களுடன் விண்ணப்பங்களை விருதுநகர் மீன்வள உதவி இயக்குநர் அலுவலகம், இராஜாமணி அரங்கம், அருப்புக்கோட்டை சாலை, விருதுநகர் என்ற முகவரியில் இயங்கும் அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமோ அனுப்பி வைத்து உதவித் தொகை பெற்று பயனடையுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.