Pages

Friday, July 31, 2015

சித்தா, ஆயுர்வேத படிப்புக்குவிண்ணப்பிக்க இன்றே கடைசி

சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட, இந்திய மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள் என, அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், இந்திய மருத்துவ படிப்புகளுக்காக, ஆறு அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 336 இடங்கள், 21 சுயநிதி கல்லுாரிகளில், 1,143 இடங்கள் உள்ளன.
இதற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பம் கடந்த, 24ம் தேதி வரை வழங்கப்பட்டது. மொத்தம் உள்ள, 1,479 இடங்களுக்கு இதுவரை, 3,850 பேர் விண்ணப்பித்துள்ளனர். 
இன்று மாலை வரை விண்ணங்களைச் சமர்ப்பிக்கலாம். தாமதமாக வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனரகம் அறிவித்துள்ளது.இதற்கான கவுன்சிலிங், ஆகஸ்ட் மாத இறுதியில் நடக்கும் என, தெரிகிறது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.