தமிழகத்தில் ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு இன்னும் அறிவிக்கப்படாததால் ஆக.,1ல் நடக்கும் ஜாக்டோ தொடர் முழக்கப் போராட்டத்தில் இப்பிரச்னையை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர்.
பள்ளிக் கல்வியில் கல்வியாண்டு துவங்கும் முன் ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. ஆனாலும் இரண்டு ஆண்டுகளாக தாமதமாக நடத்தப்பட்டது. இந்தாண்டு ஜூலை முதல் வாரம் கடந்த பின்னரும் அதற்கான அறிவிப்பு வெளியாகும் அறிகுறி கூட தெரியவில்லை.
குறிப்பாக 65 மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியிடங்கள், 650 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக கிடப்பதால் மாணவர் கல்வி மற்றும் அரசு நலத்திட்டங்கள் வழங்குவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பல்வேறு சங்க நிர்வாகிகள் இதுகுறித்து கல்வி அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றும் நடவடிக்கை இல்லை. இதனால், ஆக.,1ல் ஜாக்டோ சார்பில் நடக்கும் தொடர் முழக்க போராட்டத்தில் இப்பிரச்னையையும் எழுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜாக்டோ உயர்மட்ட குழு உறுப்பினர் சாமி சத்தியமூர்த்தி கூறியதாவது
அனைத்து ஆசிரியர்களும் எதிர்பார்க்கும் பொது மாறுதல் கலந்தாய்வு குறித்து பல முறை கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பனிடம் வலியுறுத்தப்பட்டது. ஆனாலும் அதில் முன்னேற்றம் இல்லை.
15 அம்சக் கோரிக்கையை வலியுறுத்தி ஜாக்டோ சார்பில் ஆக.,1ல் ஆசிரியர்களுடன் அரசியல் கட்சியினர், அமைப்பினர் பங்கேற்கும் தொடர் முழக்க போராட்டத்தில் இக்கோரிக்கையும் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.