பென்ஷன் வழங்குவதில் பெரிய அளவில் முறைகேடு நடக்கிறது. இறந்துபோன, 3,000 பேருக்கு, பல ஆண்டுகளாக, எஸ்.பி.ஐ., பென்ஷன் வழங்கி வருகிறது' என, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறைகேடுகள்:
ராஜ்யசபாவில் நேற்று, மத்திய உள்துறை இணை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, கிரண் ரிஜிஜு கூறியதாவது:
பென்ஷன் வழங்குவதில் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் வருகின்றன. குறிப்பாக, இறந்துபோன, 3,000க்கும் அதிகமானவர்களுக்கு, பல ஆண்டுகளாக, சுதந்திர போராட்ட வீரர்களுக்கான பென்ஷன், எஸ்.பி.ஐ., மூலமாக வழங்கப்படுகிறது. உண்மையான பென்ஷன் தொகைக்கு பதிலாக, தவறான பென்ஷன் தொகை வழங்கப்படுவதாகவும் புகார்கள் வந்துள்ளன. இதுபோன்ற முறைகேடுகளால், அரசுக்கு, 1,100 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.
இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்காக, சுதந்திர போராட்ட வீரர்களுக்கு பென்ஷன் வழங்கும் நடைமுறையில் மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது, எஸ்.பி.ஐ., மூலமாக இந்த பென்ஷன் வழங்கப்பட்டு வருகிறது. முறைகேடு தொகையில், 16 கோடி ரூபாய், எஸ்.பி.ஐ.,யிடமிருந்து திரும்ப பெறப்பட்டுள்ளது.
மாற்ற முடிவு:
இனி, சுதந்திர போராட்ட வீரர்களின் கணக்குகளை எஸ்.பி.ஐ.,யிலிருந்து, வேறு வங்கிகளுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளன. இவ்வாறு, அவர் பேசினார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.